பாண்டியர் வரலாறு

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களையே சேரும். முச்சங்கங்கள் வாயிலாக தமிழ் வளர்த்ததை எட்டாம் நூற்றாண்டு நூலான இறையனார் களவியல் உரை கூறுகின்றது.பழங்காலத்தில் பாண்டியன் தலைநகரமான தென் மதுரையில் தலைச்சங்கம் கூடியது. பின்னர் நிகழ்ந்த கடற்கோளால், தென்மதுரை உட்பட பெரும் பகுதி கடலில் மூழ்கியது. அதற்குப்பின் கபாடபுரத்தை தலைநகரமாகக் கொண்டு பாண்டிய அரசு நடைபெற்றது. இரண்டாம்கோளில் கபாடபுரமும் அழிந்தது. அதன் பிறகு மதுரை மூதூரில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்றது. பாண்டிய மன்னன் தலைமையில் புலவர்கள் கூடி தமிழ் ஆய்வு நடத்திய சிறப்பால் இந் நகரே கூடல் நகர் என்று பெயர் பெற்றது. கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தமிழர் பெருமையின் அடையாளமாக தொல்காப்பியம் ஏற்றப்பட்டது. 
பாண்டியர்கள் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். துறைமுக நகரமாக கொற்கை இருந்தது. இவர்களது சின்னம் மீன். இவர்களது அடையாள பூவாக வேம்பு இருந்தது. சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் தலை சிறந்தவன் நெடுஞ்செழியன். முதல் தமிழ் தங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் 89 பேர். இடை சங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் 59 பேர். கடைச் சங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் 49 பேர். தொல்காப்பியம், நிலந்திரு திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேறியது. 
சங்க காலத்தின் இறுதிக் காலம் ஏறத்தாழ கிபி 300 என்று சொல்லலாம். ஆனால் அதன் தொடக்க காலம் எது என்று கூற முடியவில்லை. கிபி 300 க்கு உட்பட்டவை என்று கருதத்தக்க சங்க நூல்களில் பாண்டியர் பலர் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை இரண்டு. ஒன்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பது மற்றொன்று, தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்பது.

 முன்னவன் கோவலன் காலத்தில் வாழ்ந்தவன்; சிறந்த புழவன்; மிக்க வீரம் படைத்தவன்; ஆரியப்படை கடந்தவன்; நீதி முறைக்கு அஞ்சியவன்; ஓவனை கோவலனை கோவலனைக் கொல்வித்தது தவறு என்பதை அறிந்தவுடன் தனது முறை தவறியதற்கு வருந்தி உயிர் விட்டவன். அவனது கோப்பெருந்தேவியும் உடன் உயிர் நீத்தாள்.

 ஒரு தாய் தான் பெற்ற பிள்ளைகளுள் கற்றவனுக்கு மிகுதியாக விரும்புபவன். சமுதாயத்தில் கல்வி கற்றவன் தாழ்ந்த வனாயினும் உயர்ந்தவர் ஆவன் யோசனையை கேட்பர். அவனது யோசனையை அரசனும் மதிப்பான். எனவே, கற்றவனே வீட்டிலும் சமுதாயத்திலும் அரசியலிலும் சிறப்பு பெறுவான். ஆதலால் எப்பாடுபட்டாவது ஒவ்வொருவரும் கல்வி கற்பது இன்றியமையாததாகும், என்ற பொருள் தரும் புறநானூற்றுப் பாடலை பாடியவன் இவனே.

 அடுத்த நெடுஞ்செழியன் சிறுவனாக இருந்தபோதே பட்டம் ஏற்றான். அவன் மீது சேரன், சோழன் என்ற முடியுடைய வேந்தர் இருவரும் திதியன், எழினி முதலிய ஐம்பெரும் வேளிரும் படையெடுத்தனர். இளைஞனான நெடுஞ்செழியன், ' இப்ப பகைவரை யான் வெல்லேனாயின், குடிபழி தூற்றுங் கோலேனாகுக! மாங்குடி மருதனை தலைவனாக பெற்ற புலவர் பெருமக்கள் எனது நாட்டை பாடாது ஒழிவாராக" என்று சூளுரைத்து போருக்கெழுந்தான்ச ஏழுவரோடும் போர் புரிந்தான்; இறுதியில் தலையாலங்கானம் (இன்றைய தலையாலங்காடு) என்னும் இடத்தில் அவர்களை முற்றிலும் முறியடித்தான். அதனால் ' தலையாலங்கானத்து செருவென்ற' வன் என்ற விருதுப் பெயர் பெற்றான். இவனும் சிறந்த புலவன். அவன் பாடிய வஞ்சின பாட்டு புறநானூற்றை அணி செய்கிறது. பத்துப்பாட்டுல் முல்லைப்பாட்டும், நெடுநல்பாசறை அமைப்பு, படைகளின் நிலைமை, பிரிவின்கண் இவன் மனைவி ஆற்றிலிருந்த நிலை, அரண்மனை சிறப்பு, அரச மாதேவி படுத்திருந்த கட்டிலின் சிறப்பு முதலிய பல செய்திகளை இம்மூன்று நெடும் பாட்டுகளிலிருந்து நாம் அறியலாம்.
சங்க காலத்திற்கு பின்பு ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். 1) கிபி 575 முதல் கிபி 900 வரை 2) கிபி 900 முதல் 1190 வரை 3) கிபி 1190 முதல் 1310 வரை.

  இடைக்காலப் பாண்டிய மன்னர்கள்
 ஏறத்தாழ கிபி 300 காஞ்சியில் பல்லவர் ஆட்சி ஏற்பட்டது. வல்லவர் சாதவாகனப் பேரரசின் தென் மாகாண ஆளுநராக இருந்தனர். அவர்கள் பேரரசின் வீழ்ச்சி காலத்தில் தொண்டை மண்டலத்தை கைப்பற்றினர். அம்முயற்சியில் பல்லவரால் தாக்குண்ட களப்பிரர் என்ற கூட்டத்தார் தெற்கு நோக்கி சென்று சோழ பாண்டிய அரசுகளை நிலைகளையே செய்தனர் சுமார் கிபி 572 வரையில் பாண்டிய நாட்டில் களப்பிரர் ஆட்சி இருந்தது என்று கூறலாம். கிபி 572 கடுங்கோன் என்ற பாண்டியன் களப்பிரர் ஆதிக்கத்தை ஒழித்து மீண்டும் பாண்டியர் ஆட்சியை மதுரையில் நிலை நிறுத்தினான். அக்காலம் முதல் சோழப் பேரரசு தலை தூக்கிய கிபி 875 வரையில் பாண்டியர்கள் தம் ஆட்சி பெற்று விளங்கினர்.

 பாண்டியன் கடுங்கோன், மாறவர்மன் அவனி சூளாமணி, செழியன் சேந்தன், மாறவர்மன் அரிகேசரி, கோச்சடையான் ரணதீரன், அரிகேசரி பராங்குச மாறவர்மன், நெடுஞ்சடையன் பராந்தகன், இராசசிம்மன் பாண்டியன், முதலாம் வரகுணன், சீமாறன் சீவல்லபன், இரண்டாம் வரகுணன், பராந்தக பாண்டியன்.
                     THE END 

Comments